பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - கடகம்

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - கடகம்

வெளிபடையாக எதையும் பேசி செயல்பட்டு வரும் கடக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்கள் ராசிக்கு தனகாரகன் பார்வை பெறுவதும், ராசிநாதன் முயற்சி ஸ்தானத்தில் கேதுவுடன் இணைந்து மேன்மை அடைவதும், தொழில் ஸ்தானத்தில் குரு அமர்ந்து தனஸ்தானத்தை பார்வை இடுவதும்.. நிறைவான தொழில் வளர்ச்சியையும், சுய ஜாதகத்தில் சனி ஆறு, பனிரெண்டில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பொருளாதார வளர்ச்சியும் கிடைக்கும். மிதமான வளர்ச்சியாக இருந்தாலும்.. உங்களின் சிறப்பான செயல்பாடுகள் மூலம் தக்க வைத்துக் கொள்வீர்கள். அரசியலில் உங்களின் செல்வாக்கும்.. ஆதரவாளர்களின் போக்கும்.. சரி செய்ய வேண்டி வரும். உங்களை எதிர்த்து வந்தவர்கள் இம்மாதம் கொஞ்சம் அடங்கி இருப்பார்கள். சோதனைகளை சாதனைகளாக்கி காட்டுவீர்கள். சிக்கல்கள் தானே விலகும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
10-02-2024 சனி பகல் 01.43 முதல் 12-02-2024 திங்கள் பகல் 02.03 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-

புனர்பூசம் 4ம் பாதம்:
 
திட்டமிட்ட காரியங்களில் சில தடைகள் இருந்தாலும், உங்களின் சொந்த முயற்சிகளால் வளம் பெறுவீர்கள். பொருளாதாரம் சீராகும்.
 
பூசம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
வரவுக்கு, மீறிய செலவுகள் வந்தாலும் சரி செய்து விடுவீர்கள். பாலம் போல் பலருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை உண்டாகும்.
 
ஆயில்யம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
சிறந்த அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பாராட்டுப் பெறுவீர்கள். முக்கிய நிகழ்ச்சிகளில் பங்குபற்றி மேன்மை பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
வெண்மை, பலநிறம், சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
வடக்கு, வடமேற்கு, கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
திங்கள், புதன், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணி ராகு காலத்தில் நவகிரகங்களுக்கு மூன்று விளக்கு போட்டு, மிளகு பொங்கல் நைவேத்தியம் வைத்து வணங்கி வர, சகல காரியமும் தடை நீங்கி, லாபம் கிட்டும்.